• Dec 27 2024

தனுஷுக்கு ஏற்பட்ட ஆசையின் விளைவு தான் ராயன்.. பந்தயம் அடிக்குமா? பிரபலம் சொன்ன உண்மை

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்த படம் தான் ராயன். இந்த படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது. ஜூலை 26 படம் வெளியாவதற்கு தயாராகவும் உள்ளது.

ராயன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் பிரகாஷ் ராஜ், செல்வராகவன், எஸ்.ஜே சூர்யா, சந்திப் கிஷன் மற்றும் அபர்ணா பாலமுரளி  உள்ளிட்டார் நடித்துள்ளார்கள்.

பொல்லாதவன் படத்தின் மூலம் தனுஷ் சினிமாவுக்கு அறிமுகமானார். இவரை அறிமுகப்படுத்திய வெற்றிமாறன் தொடர்ந்து ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் உள்ளிட்ட படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரின் தங்கை சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் இயக்குனர்கள் என்ற படியால் தானும் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் பா.பாண்டி படத்தை இயக்கினார் தனுஷ். தற்போது ராயன் படத்தை இயக்கி வெற்றிமாறனாகவே மாறி உள்ளார் என அந்தணன் கூறியுள்ளார்.


அதன்படி அவர் மேலும் கூறுகையில், தனுஷ் பற்றி சமூக வலைத்தளங்களில் கிளம்பிய கிசுகிசுக்கள் உண்மைதான். ஆனால் அது எல்லாம் அவர் இப்போது செய்ததல்ல. ஆரம்பத்தில் அவர் செய்தது. அதன் பிறகு வெற்றி மீது வேட்கை எழுந்த நிலையில், சாதிக்க வேண்டுமென்றால் வெற்றிகளை குவிக்க வேண்டும் என நினைத்து தொடர்ந்து அதற்காக உழைத்து வருகின்றார் .

இப்பவும் எதற்கெடுத்தாலும் தனுஷ் தான் காரணம் என பேசுவதெல்லாம் சரி கிடையாது. சன் பிக்சர்ஸ் ஆரம்பத்தில் ராயன் படம் ஏ சான்றிதழ் படமாக வரும் என்பதை அறிந்து பல கட்டுப்பாடுகளை விதைத்தது. ஆனால் ஒரு கட்டத்துக்கு மேல் அதெல்லாம் பரவாயில்லை படம் தாறுமாறாக உள்ளது இந்த படம் நிச்சயம் பந்தயம் அடிக்கும் என நினைத்து தனுசுக்கு முழு சுதந்திரத்தை மாறன் கொடுத்ததன் விளைவாக இந்த படம் சிறப்பாக வந்துள்ளதாக பலரும் பேசிக் கொள்கின்றார்கள்.

அதன்படி ராயன் திரைப்படம் தனுஷுக்கு மிகப்பெரிய படமாக அமையும் என அந்தணன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Advertisement

Advertisement