• Jul 27 2025

சீரியலில் நடிக்க பிரேக் எடுக்க காரணம் இது தான்..? நடிகை ரேகா கிருஷ்ணப்பா ஓபன் டாக்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் வெளியான சேச்சி அம்மா என்ற சீரியல் மூலம் முதல் முறையாக நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. இவர் முதல் சீரியலிலேயே வில்லியாக நடித்து கலக்கியிருந்தார்.

இதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம்  மற்றும் மலையாளம் என கிட்டத்தட்ட நான்கு மொழிகளில் நடித்து வருகின்றார்.

தமிழில் பாரிஜாதம் என்ற தொடரில் அறிமுகமான இவர், சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் சீரியல் மூலம் நல்ல ரீச்சை பெற்றார்.

அதற்குப் பிறகு நந்தினி, தமிழும்  சரஸ்வதியும், சீதா ராம் போன்ற சீரியல்களில் தொடர்ந்து நடித்தார். அது மட்டும் இன்றி தனது கணவருடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


இந்த நிலையில் தனது சினிமா பயணம் குறித்து சீரியல் நடிகை ரேகா கிருஷ்ணப்பா பேட்டி ஒன்று வழங்கியுள்ளார். அதில் அவர் கூறுகையில், தான் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் அப்போது சீரியலே போதும் என்று இருந்தேன்.

ஆனால் ஒரு கட்டத்தில் சீரியலில் வரும் கேரக்டர்கள் எல்லாமே ஒரே மாதிரி எனக்கு இருக்க, சீரியலிலிருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று தோன்றியது. இதனால் தான் கிட்டத்தட்ட மூன்று வருடம் சீரியலை விட்டு விலகி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். அதற்கு பிறகு இப்போது மீண்டும் சீரியல் நடித்துக் கொண்டிருக்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement