தமிழ் சினிமாவில் அடிக்கடி விமர்சனங்களும், பாராட்டுகளும் இடம்பெறும். சில நேரங்களில் ஒரு படம் மீது பரபரப்பான எதிர்பார்ப்பு உருவாகி, அது திரையரங்கிற்கு வந்தபோது அந்த எதிர்பார்ப்பை சந்திக்க முடியாமல் போனாலே அந்த படம் பெரும் விவாதங்களுக்கு இடமளிக்கிறது. இப்படி இப்போது சிக்கிக்கொண்டிருப்பது தான் ‘தக் லைஃப்’ (Thug Life) படம்.
இப்படம் மீது ரசிகர்களிடையே இருந்த பரபரப்பும், இயக்குநர் மணிரத்னம் – கமல் ஹாசன் கூட்டணி மீதான நம்பிக்கையும், சமீபத்திய விமர்சனங்களால் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘தக் லைஃப்’ பற்றி இயக்குநர் ஆர். கே. செல்வமணி அளித்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி தனது சமீபத்திய பேட்டியில், "சில படங்கள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. யானைக்கும் அடி சறுக்கும். அது ‘தக் லைஃப்’ படத்திற்கு பொருந்தும்," என்று கூறியுள்ளார்.
இது ஒரு வகையில், தக் லைப் படம் மீதான ரசிகர்களின் ஏமாற்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும், அதே நேரத்தில் கமல் – மணிரத்னம் போன்ற முன்னணி பிரபலங்களை தாக்கும் வகையிலும் அமைந்துள்ளது.
Listen News!