• Dec 26 2024

குற்றஉணர்ச்சியில் தலைகுனிந்த ரோகிணி... மீனா சொன்ன பாயிண்ட்! உணர்ச்சிப் பூர்வமாக வெளியான ப்ரோமோ

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் ரவி தனது ஹோட்டலில் சிறந்த தம்பதியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அவோர்ட் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணப் பரிசு  வழங்க உள்ளதாக கூற அதில் ரவி, முத்து, மனோஜ் ஆகியோர்கள் ஜோடியாக கலந்து கொள்கின்றார்கள்.

இதுதான் போது மனோஜ் ரோகினியின் கைகளை பிடித்து என் மனைவி என்னிடம் எதையும் மறைக்கவில்லை என கூறும் போது குற்ற உணர்ச்சியினால் ரோகிணி தலைகுனிகின்றார்.

அதுபோலவே ரவியும் மேடையில் தனது அப்பாவுக்கு மூன்று பிள்ளைகள் அதேபோல தனக்கு மூன்று பிள்ளைகள் வேண்டும் என ஸ்ருதியின் கைகளை பிடித்து சொல்ல, அவர் கோபத்தில் எழுந்து வந்து விடுகின்றார்.

இதை தொடர்ந்து மீனாவும் முத்துவும் இருக்கும் போது மீனா முத்துவின் கைகளை பிடித்து எனது அப்பா எப்படி என்னை பார்த்துக் கொண்டாரோ அது போலவே இவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கின்றார் எனக்கு வேறு யாருமே வேண்டாம் என் புருஷன் மட்டும் போதும் என கண்ணீர் தளும்ப சொல்லுகின்றார்.

இறுதியில் இந்த போட்டியில் மீனா, முத்து ஜோடி வெற்றி பெறுகின்றதாக அறிவிக்கின்றார்கள் இதுதான் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ.

Advertisement

Advertisement