• Dec 27 2024

விஜய் மில்டன் - சேரன் கூட்டணியில் கோலி சோடா 3.. வெளியான அதகள அப்டேட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக காணப்படுபவர் தான் விஜய் மில்டன். இவர் ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குனர் ஆனவர். ஆட்டோகிராப், காதல், சாமுராய், போஸ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

அழகாய் இருக்கிறது பயமாய் இருக்கிறாய் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அடி எடுத்து வைத்தார். அதன் பின்பு அவர் இயக்கிய கோலி சோடா திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.

கோலி சோடா படத்தின் வெற்றி அதன் அடுத்த சீக்வெல்லை எடுக்க தூண்டியது. 2018ம் ஆண்டு ரஃப்நோட் புரொடக்‌ஷனின் நிறுவனத்தின் கீழ் அவரது சகோதரர் பரத் சீனி தயாரிப்பில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன், பரத் சீனி, சுபிக்ஷா, வினோத், எசக்கி பரத், க்ரிஷா குருப், ரக்ஷிதா, செம்பன் வினோத் ஜோஸ், சரவண சுப்பையா மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியானது. 


இந்த நிலையில், கோலிசோடா பார்ட் 3 குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதற்கு கோலிசோடா ரைசிங் என தலைப்பிடப்பட்டுள்ளது.

குறித்த படத்தில் சேரன், சாம், புகழ், அவந்திகா, அம்மு, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்கள், இந்த படம் கூடிய விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாஸ்டலில் வெளியாக உள்ளது.




Advertisement

Advertisement