• Apr 17 2025

மீனாவுடன் கொஞ்சிக் கூத்தடிக்கும் முத்து...!மனோஜை விட்டுப் பிரிந்து தவிக்கும் ரோகிணி..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, ஸ்ருதி ரோகிணியைப் பாத்து எல்லாரும் விதி என்று ஒன்னு சொல்லுறாங்க அது உண்மை தான் போல என்று சொல்லுறார். மேலும் அவளா நேரமா எல்லாரும் மண்டபத்தில தானே இருந்தாங்க ஆனா உங்கட மலேசியா மாமா உங்க கண்ணில படாமல் முத்துவோட கண்ணில பட்டார் பாருங்க அதுதான் விதி என்றார். அதுக்கு ரோகிணி என்ர நிம்மதிய கெடுக்க என்றே முத்துவும் மீனாவும் இருக்கிறாங்க என்று சொல்லுறார்.

அதைக் கேட்ட மீனா நாங்க யாரையும் தேடிப் போய் யாரோட வாழ்க்கையையும் கெடுக்கோணும் என்று முடிவெடுக்கேல என்று சொல்லுறார். மேலும் எல்லா விஷயமும் தானாத் தான் வந்து அமைஞ்சது என்கிறார். இதனை அடுத்து ரோகிணின்ர நிலமையைப் பாத்து ஸ்ருதியும் மீனாவும் சிரிக்கிறார்கள். அதுக்கு ரோகிணி ஏன் நிறுத்திட்டீங்க நல்லா சிரிங்க என்று சொல்லுறார்.


மேலும் என்னோட நிலமை உங்க எல்லாருக்கும் சிரிப்பா இருக்கோ என்கிறார். இதனை அடுத்து ஸ்ருதி நீங்களே எதிர்பார்க்காம உங்க கதையில மீனாவும் முத்துவும் டுவிஸ்ட் வச்சிட்டாங்க என்று சொல்லுறார். இதனைக் கேட்ட ரோகிணி நான் உங்களுக்கு காமெடியாத் தெரியுறேன் என்கிறார். இதனை அடுத்து விஜயா ரோகிணிய தரையில நித்திர கொள்ளச் சொல்லுறார்.

அதைக் கேட்டு ரோகிணி அழுது கொண்டிருக்கிறாள். இதனை அடுத்து மீனாவும் முத்துவும் ரோகிணியைப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள். பின் மீனாவுக்கு வித்தியா போன் எடுத்துக் கதைக்கிறாள். இதைத் தொடர்ந்து முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement