• Apr 17 2025

வரதட்சனை தரச்சொல்லி மிரட்டும் சுதாகர்..! கோபத்தின் உச்ச கட்டத்தில் கத்தும் பாக்கியா..!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, ஈஸ்வரி மாப்பிள வீட்ட எல்லாரும் நல்லா நடந்துகிட்டாங்க என்று சொல்லுறார். மேலும் நமக்கு நேரம் வேற கொஞ்சமாத் தான் இருக்கு மாப்பிள்ளைக்கும் நகை வாங்கோணும் என்று சொல்லுறார். இதைக் கேட்ட செழியன் என்ன பண்ணணும் என்று ஒரு லிஸ்ட் மட்டும் போட்டுத் தாங்க நாங்க பாத்துக் கொள்ளுறோம் என்று சொல்லுறார். அப்புடியே எல்லாரும் ஒண்ணா இருந்து கலியாணத்தப் பற்றிக் கதைச்சுக் கொண்டிருக்கிறார்கள்.

இதனை அடுத்து எழில் இனியாவுக்குத் தேவையான எல்லாத்தயும் நான் செய்வன் என்று சொல்லுறார். மறுநாள் பாக்கியா ரெஸ்டாரெண்டுக்குப் போய் சாப்பாடு எல்லாம் ரெடி ஆகிட்டா என்று கேக்கிறார். அதைக் கேட்ட செல்வி சாப்பாடு எல்லாம் நேரடியா மண்டபத்துக்குப் போகுதோ என்று கேக்கிறார். இதனை அடுத்து பாக்கியா எல்லாரையும் கலியாணத்திற்கு கட்டாயம் வரோணும் என்று  சொல்லுறார்.


இதைத் தொடர்ந்து பாக்கியா செல்விகிட்ட நீ கலியாணத்திற்கு வருவா தானே என்று கேக்கிறார். அதுக்கு செல்வி கண்டிப்பா வரணுமா அக்கா என்றதுடன் உன்னோட வீட்டில இருக்கிறவைக்குத் தான் என்னய பிடிக்காதே என்று சொல்லுறார்.

அதுக்கு பாக்கியா செவ்வியப் பாத்து இனியா நீ தூக்கி வளர்த்த பிள்ள அவளோட கலியாணத்துக்கு வரமாட்டியா என்கிறார். அப்புடியே ரெண்டு பேரும் கதைச்சுக் கொண்டிருக்கும் போது அங்க சுதாகர் வந்து நிக்கிறார். இதனை அடுத்து சுதாகர் வரதட்சனையா ரெஸ்டாரெண்ட தரச் சொல்லிச் சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா கோபத்துடன் சுதாகரைப் பேசுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement