சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆஃபிஸில் மாஸ் காட்டி வருகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்துள்ளார்.
மேலும் சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மே 15ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் கதைக்களம், சூர்யாவின் தீவிரமான நடிப்பு, திரிஷாவின் எமோஷனல் காட்சிகள் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியின் வித்தியாசமான மேக்கிங் ஆகியவை ரசிகர்களை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் கலந்த காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில் 'கருப்பு' திரைப்படத்தின் வசூல் விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் Sacnilk வலைதளத்தின் தகவலின்படி, படம் வெளியான ஐந்தாவது நாளில் மட்டும் இந்தியாவில் சுமார் 12.75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஐந்து நாட்களில் 110 கோடி ரூபாயை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் உலகளவில் இப்படம் இதுவரை 161 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான வேகத்தில் சென்றால் இன்னும் ஓரிரு நாட்களில் 'கருப்பு' திரைப்படம் 200 கோடி கிளப்பில் இணையலாம் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்த்து வருகின்றன.
Listen News!