“கே.ஜி.எஃப்” மற்றும் “சலார்” போன்ற பான் இந்தியா ஹிட் படங்களை கொடுத்த பிறகு, இயக்குனர் பிரசாந்த் நீல் மீண்டும் ஒரு அதிரடி கூட்டணியில் களமிறங்குகிறார். இந்த முறை அவருடன் இணைவது நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் என்பதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இவர்கள் இணையும் புதிய திரைப்படத்திற்கு “டிராகன்” என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் நீலின் ஸ்டைல் ஆக்ஷன் மற்றும் என்.டி.ஆரின் மாஸான நடிப்பு சேரும் போது படம் பான் இந்திய அளவில் பெரிய வெற்றியை பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.
மேலும், என்.டி.ஆரின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.35 நிமிடங்கள் கொண்ட மிரட்டல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கிளிம்ப்ஸில் கதையின் டோன் மற்றும் ஆக்ஷன் ஸ்டைல் பற்றிய ஒரு சின்ன முன்னோட்டம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்திற்கு இசையமைப்பது பிரபல இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் ஆவார். அவரது அதிரடி பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
பான் இந்தியா ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இந்த படம், தற்போது 2027 ஜூன் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் இதை மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
Listen News!