• Dec 26 2024

ஜப்பானில் கால்பதிக்கும் பிரபாஸின் சலார்! படக்குழு வெளியிட்ட தகவல் !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

பல படங்களில் நடித்தும் கூட பிரபலமாகாதவர்கள் ஒரு சில முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து கொடுக்கும் ஹிட்  திரைப்படத்தின் மூலம் பேசப்படுபவராக மாறுகின்றனர். அவ்வாறு பாகுபலி மூலம் பிரபலமாகிய பிரபாஷின் சலார் திரைப்படம் குறித்து தகவல் கிடைத்துள்ளது.


சாலார் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படம் ஆகும். KGF 1,2 திரைப்படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தில் பிரபாஸ் ,பிருத்விராஜ் சுகுமாரன் , ஸ்ருதிஹாசன் , ஜெகபதி பாபு , பாபி சிம்ஹா , ஸ்ரீயா ரெட்டி , ஜான் விஜய் , தின்னு ஆனந்த் , ஈஸ்வரி ராவ் , ராமச்சந்திர ராஜு , பிரம்மாஜி , தேவராஜ் , மைம் கோபி , சவுரவ் லோகேஷ் , சவுரவ் லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


இவ்வாறு மிகப்பெரிய ஹிட் படமாக இருக்கும் சலார் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.குறித்த திரைப்படம் இந்தியாவில் வெளியாகி ஹிட் ஆகிய நிலையில் ஜப்பான் நாட்டிலும்  வெளியாகிறது என படக்குழு அறிவித்துள்ளது. அங்கு RRR போன்று நல்ல வசூல் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


Advertisement

Advertisement