• Dec 25 2024

தீபாவளியை முன்னிட்டு சேலை பிசினஸில் பிசியான சமந்தா! டிரெண்டிங்காகும் Saaki விளம்பரம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தீபாவளி பண்டிகை நெருங்கிய நிலையில், நடிகை சமந்தா தன்னுடைய சேலை பிசினஸை டெவெலப் செய்யும் பணிகளில் கடும் பிஸியாக உள்ளார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த குஷி திரைப்படம் அவருக்கு அமோக வரவேற்பை பெற்று கொடுத்துள்ளது.

கடந்த காலங்களில் மயோசிடிஸ் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சமந்தா, சிகிச்சைக்காக அமெரிக்காவில் சில மாதங்கள் தங்கியிருந்தார். அதன்படி, மயோசிடிஸில் இருந்து முழுமையாக மீண்ட பின்பே சினிமாவில் நடிக்க முடிவெடுத்துள்ளார்.


தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் இந்தியாவுக்கு திரும்பிய சமந்தா, தனது பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார். அவர் சாகி என்கிற ஆடை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

தற்போது தீபாவளி சீசன் என்பதால் தன்னுடைய சாகி நிறுவனத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சேலைகளை அணிந்து விதம் விதமாக  போட்டோஷூட் நடத்தி, அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் செய்து வருகிறார் சமந்தா.


இதேவேளை, சமந்தாவின் இந்த கவர்ச்சிகரமான சேலை புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களை வைரலாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement