• Dec 26 2024

சமந்தாவின் சர்ச்சைக்குரிய மருத்துவ பதிவு.. ‘தளபதி 69’ படத்தில் இருந்து நீக்கிவிட்டாரா விஜய்?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா சமீபத்தில் மருத்துவம் குறித்த ஒரு சர்ச்சைக்குரிய பதிவை செய்த நிலையில் அந்த பதிவு பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியதால் விஜய் தனது ’தளபதி 69’ படத்தில் இருந்து சமந்தாவை நீக்கி விட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் சமந்தா தான் ஹீரோயின் என்று ஏற்கனவே உறுதி செய்யப்பட்டு இருந்தது என்பதும் எச் வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஏற்கனவே விஜய்யுடன் ’மெர்சல்’ ’தெறி’ உள்ளிட்ட படங்களில் சமந்தா நடித்திருந்த நிலையில் மீண்டும் விஜyயுடன் இணைவதாக மகிழ்ச்சியுடன் இருந்த நிலையில் சமீபத்தில் அவரது மருத்துவ பதிவு பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.



ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசர் செய்து சுவாசித்தால் சில நோய்கள் தீரும் என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த பதிவுக்கு மருத்துவர் ஒருவர் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என்று அவர் கூறினார். மேலும் சில திரை உலக பிரபலங்களும் குறிப்பாக விஷ்ணு விஷால் மனைவி மற்றும் சிலர் சமந்தாவுக்கு கண்டனம் தெரிவித்தார்கள்.

இதனால் சமந்தாவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்ட  நிலையில் தான் ’தளபதி 69’ திரைப்படத்தில் சமந்தாவை நீக்கும்படி இயக்குனரிடம் விஜய் கூறியதாகவும் இதனை அடுத்து நயன்தாரா உள்ளிட்டவர்களுடன் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement