தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயுடன் உள்ள திருமணத்தை ரத்து செய்யுமாறு அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா அளித்த மனு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பலரும் விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
குறித்த விவாகரத்து மனுவில், “என்னுடைய கணவர் விஜய் நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார். இதனை நான் 2021 ஆம் ஆண்டு கண்டுபிடித்தேன். அதன் பின்னர் அந்த உறவை துண்டிப்பதாக அவர் கூறினார். ஆனால் அவர் அதை தொடர்ந்தார்.
மேலும் என்னை வீட்டிற்குள்ளேயே அடிப்படை உரிமைகள் இன்றி முடக்கி வைத்தார். நடிகையுடன் வெளிநாடுகளுக்கு செல்வதும், பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் எனக்கும் என் குழந்தைகளுக்கு மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது.
எனவே விஜயுடன் உள்ள திருமண ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் அவரது வருமானம் மற்றும் சொத்துகளுக்கு ஏற்ற வகையில் எனக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும். இந்த வழக்கின் செலவுகளையும் விஜய் ஏற்க வேண்டும்,” என குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜயின் மனைவி சங்கீதா அளித்ததாக கூறப்படும் மனு உண்மையல்ல என்றும், இது திமுக கட்சியினரால் போலியாக சித்தரிக்கப்பட்ட பெட்டிஷன் என்றும் பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் சங்கீதா அண்ணியின் விவாகரத்து பெட்டிஷன் திமுக கட்சியினரால் போலியாக தயாரித்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இது நீதிமன்றத்தில் இருந்து வெளியான ஆவணம் அல்ல. விஜய் அண்ணாவின் அரசியல் வாழ்க்கையை கெடுக்க முயற்சித்த செயல் இது. இதற்கு காலமே சரியான பதில் அளிக்கும்.
மேலும், நீதிமன்றம் வழங்கும் பெட்டிஷன்களில் புகைப்படம் ஒட்டப்படாது. ஆனால் இதில் சங்கீதாவின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது. இதுவே அது போலி ஆவணம் என்பதற்கான ஆதாரம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
Listen News!