• Apr 23 2026

‘காந்தி டாக்ஸ்’ ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வசனங்களே இல்லாத சைலன்ட் திரைப்படமாக உருவான இந்த படம், வித்தியாசமான கதை சொல்லல் முறையால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உரையாடல்கள் இன்றி காட்சிகள் மற்றும் பின்னணி இசையின் மூலம் கதையை நகர்த்தியுள்ளமை இப்படத்தின் சிறப்பம்சமாகும்.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் முதன்முதலில் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) திரையிடத் தேர்வு செய்யப்பட்டது. அதன் பின்னர் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த ஜனவரி 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. சிலர் படத்தின் முயற்சியை பாராட்டிய நிலையில், சிலர் வேறுபட்ட கருத்துகளையும் வெளியிட்டனர்.


வசனங்கள் இல்லாத போதிலும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வழங்கிய பின்னணி இசை ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம் வருகிற மார்ச் 6 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் காண தவறியவர்கள் இப்போது வீட்டிலிருந்தபடியே இப்படத்தை ரசிக்கலாம்.


Advertisement

Advertisement