• Dec 26 2024

விஜய் அரசியல் கட்சிக்காக பாடல்கள் கம்போஸ் செய்ய மாட்டேன்: சந்தோஷ் நாராயணன் அதிர்ச்சி பேட்டி..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவரது கட்சிக்காக பாடல்கள் கம்போஸ் செய்யும் வாய்ப்பு வந்தால் அவரது கொள்கை மற்றும் கோட்பாடுகளை பார்த்து தான் பாடல்கள் கம்போஸ் செய்வேன் என்றும் காசுக்காக செய்ய மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவர் அடுத்த கட்டமாக கட்சியை விளம்பரப்படுத்த தொலைக்காட்சி சேனல் ஆரம்பிக்க இருப்பதாகவும், அதேபோல் கட்சி சார்ந்த பாடல்களை உருவாக்கி அதில் அவர் சில காட்சிகளில் தோன்ற இருப்பதாகவும் கூறப்படுகிறது.



விஜய் அரசியல் கட்சி பாடல்களை உருவாக்க பல்வேறு இசையமைப்பாளர்களிடம் அவரது தரப்பினர் அணுகி கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் தனது கருத்தை தெரிவித்துள்ளார். விஜய் அரசியல் கட்சிக்காக பாடல்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்தால் வெறும் விளம்பரத்திற்காகவோ பணத்திற்காகவோ அந்த பாடலை நான் கம்போஸ் செய்ய மாட்டேன், ஆனால் அதே நேரத்தில் அவரது அரசியல் பணிகள், கொள்கைகள், தொலைநோக்கு பார்வை ஆகியவை உண்மையாக இருந்தால் கண்டிப்பாக முழு மனதுடன் அவருக்காக ஒரு பாடலை கம்போஸ் செய்து தருவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் விஜய் அரசியலுக்கு வந்தது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவரிடம் தனிப்பட்ட நேர்மை இருப்பதால் அது அரசியலிலும் பிரதிபலிக்கும் என்று நான் நினைக்கிறேன் என்றும் ஆனால் அதே நேரத்தில் அவரது கொள்கையை பொறுத்துதான் அவருக்கு கிடைக்கும் ஓட்டுகள் குறித்து தெரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்..

Advertisement

Advertisement