• Dec 26 2024

நாட்டாமை சரத்குமார் தப்பான முடிவை எடுத்துட்டாரே.. புலம்பும் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமார் பல ஆண்டுகளாக திரையுலகில் நடித்து வருவது மட்டுமின்றி அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பதும் அவர் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தனது கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் நாட்டாமை சரத்குமார் தவறான முடிவு எடுத்து விட்டதாகவும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சரத்குமார் பாஜக கூட்டணியில் இணைந்தது குறித்து  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நிறைவு. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் திரு.அரவிந்த் மேனன் அவர்கள் பிப்ரவரி 28 ஆம் தேதி என்னை நேரில் சந்தித்து, பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி குறித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

 
அதில் ஒருமித்த கருத்துகள் உடன்பட்டதால் நேற்று (05.03.2024) மத்திய அமைச்சர் மாண்புமிகு திரு. L.முருகன் அவர்கள், தேசிய செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. H.ராஜா அவர்கள், பாஜக தமிழக பொறுப்பாளர் மற்றும் தேசியச் செயலாளர் திரு.அரவிந்த்மேனன் அவர்கள் ஆகிய மூவரும் குழுவாக வந்து என்னை சந்தித்து கூட்டணி குறித்து மீண்டும் பேசினார்கள். இரண்டாம் கட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தேறியது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக்குழு, மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஏற்கனவே எனக்கு பாராளுமன்றத் தேர்தலில் முடிவெடுக்கும் அதிகாரத்தினை வழங்கி, எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று உத்தரவாதம் அளித்ததன் அடிப்படையில், நாடு வளம் பெற, ஒற்றுமையுணர்வு ஓங்கிட, மீண்டும் நல்லாட்சி அமைந்திட மூன்றாவது முறையாக மாண்புமிகு திரு.நரேந்திர மோடி அவர்கள் பாரத பிரதமராக தேர்ந்தெடுக்க பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளேன். மற்ற விபரங்களை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்கிறேன். நன்றி, வணக்கம்

பாஜக கூட்டணிக்கு வந்த சரத்குமாரை தமிழக பாஜக தலைவர் வரவேற்று தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

Advertisement

Advertisement