• Dec 26 2024

ஜனவரியில் சரவெடி... இளையதளபதியின் இலங்கை வருகை... மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரும் இளையதளபதி என ரசிகர்களால் கொண்டாடப்படுபவருமான விஜய் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்படத்தில் நடித்து பெரிய வெற்றியை கண்டவர் நடிகர் விஜய் பல கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்த லியோ திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.


இந்நிலையில்  'தளபதி 68' இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. 'தளபதி 68 ' திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 


இந்த படப்பிடிப்பு  ஜனவரி இரண்டாவது வாரத்தில்  ஆரம்பமாகவுள்ளதுடன்  'தளபதி 68' படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இந்நிலையில், இலங்கைக்கு வருகைதரவுள்ள நடிகர் விஜய்யினை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

Advertisement

Advertisement