சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரேகா தனது அப்பா வீட்டில்தான் இருக்கிறார் என்ற உண்மையை கண்டுபிடித்த மீனா, முத்துவிடம் கூறுகிறார்.
இதையடுத்து, உடனடியாக முத்துவும் அவரது நண்பரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று பேசுகின்றனர். ஆனால், போலீசார் சத்யாவை விட மறுக்கின்றனர். இதனால், நான் இன்கம் டாக்ஸ் ஆபீஸில் இருந்து வருகிறேன். நீங்கள் லஞ்சம் வாங்கி இருக்கிறீர்களா? இல்லை கமிஷனர் ஆபீசில் நான் பேசவா? அந்தப் பெண் அவங்க அப்பா வீட்டில்தான் இருக்கிறார். இது ஒரு பொய் புகார், என்று அதிரடியாக ஆக்ஷனில் இறங்குகிறார் முத்துவின் நண்பர்.
இதனால் என்ன செய்வது என்று தெரியாத போலீசார், ரேகாவின் அப்பாவுக்கு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு சத்யாவை விடுதலை செய்கின்றனர். இதனால் ரேகாவை வேறு இடத்திற்கு அனுப்பி வைக்க சிந்தாமணி திட்டம் போடுகிறார்.
அப்போது, சத்யா நடக்க முடியாமல் வெளியே வருகிறார். இதைப் பார்த்து அனைவரும் அழுது புலம்புகின்றனர். மேலும், வெளியில் வந்த மீனா, அருணைப் பார்த்து, சத்யாவுக்காக ஒரு வார்த்தை கூட நீங்கள் பேசவில்லை. அவனை உறவுக்காரராக மட்டுமல்ல, ஒரு தவறு செய்யாத பையனாக கூட நீங்கள் நினைத்துப் பார்க்கவில்லை, என்று கூறுகிறார்.

அதற்கு முத்து, உனக்கு என்னதான் கோபமாக இருந்தாலும் என்னிடம் காட்டியிருக்க வேண்டும். இந்தக் குடும்பத்தின் மீது காட்டியிருக்கக் கூடாது என்று அருணை திட்டிவிட்டு செல்லுகிறார்.
அதன் பின்னர், வீட்டிற்கு வந்த மீனாவின் குடும்பத்தினர் அனைவரும், இந்த காதல் வேண்டாம், உன்னுடைய உயிருக்கு ஆபத்து அவரும் என்று சத்யாவுக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆனாலும், முத்து சத்யாவுக்கு ஆதரவாக நிற்கிறார்.
அது மட்டுமில்லாமல், சத்யா தனது காதலில் உறுதியாக இருக்கிறார். அவர்கள் இணையவில்லை என்றால், விபரீதமான முடிவு எடுத்து விடுவார்கள், அதனால் இரண்டு குடும்பங்களுக்கும் தான் இழப்பு என்று கூறுகிறார். இதைக் கேட்ட மீனாவும் சத்யாவின் காதலுக்கு ஆதரவாக களமிறங்குகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!