• Dec 27 2024

வெங்கல் ராவ்வின் மருத்துவ செலவுக்கு நிதியுதவி வழங்கிய சிம்பு... வேறு யாரும் முன்வருவார்களா?

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல காமெடி நடிகர்களுள் ஒருவர்தான் வெங்கல் ராவ். இவர் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த இவர், ஆரம்பத்தில் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றியுள்ளார். அதற்குப் பிறகு நகைச்சுவையின் பக்கம் திரும்பி உள்ளார்.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு விஜயவாடாவில் உள்ள அரச மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.


இதை தொடர்ந்து கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் தனது கை, கால் செயலிழந்து விட்டதாக கூறி தனக்கு உதவி செய்யுமாறும் திரையுலகினருக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவ்வின் மருத்துவ சிகிச்சைக்காக சுமார் 2 லட்சம் ரூபாயை நடிகர் சிம்பு வழங்கி உள்ளார். குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement