• Dec 26 2024

சிறகடித்து மலேசியா பறந்த வெற்றி வசந்த்.. ட்வின் டவரின் முன் போஸ் கொடுத்த முத்து..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் டிஆர்பியில் முன்னணி இடத்தை பெற்று இருக்கும் நிலையில் ஒவ்வொரு நாளும் பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் கதை குழுவினர் பார்வையாளர்களின் பல்ஸை பிடித்து சரியாக கதையை நகர்த்திக் கொண்டு செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் தான் வெற்றி வசந்த் , கோமதி பிரியா உட்பட அனைவரும் பிரபலம் ஆனார்கள் என்பதும் சமூக வலைதளங்களிலும் இவர்களது பக்கங்களுக்கு ஃபாலோயர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வெற்றி வசந்த் சென்ற நிலையில் அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது என்பதும் ஒரு சீரியல் ஹீரோவுக்கு இவ்வளவு பெரிய வரவேற்பா? என்று திரை உலகினர்களே ஆச்சரியப்படும் அளவுக்கு இந்த விழா நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விழா முடிந்ததும் நடிகர் வெற்றி வசந்த் மலேசியாவை சுற்றி பார்த்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறிப்பாக மலேசியாவில் பிரபலமான ட்வின் டவர் முன் அவர் எடுத்த புகைப்படங்களுக்கு ஏராளமான கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது. மேலும் அவர் சீக்கிரமே திரைப்படங்களில் நடிக்க ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றன.


Advertisement

Advertisement