அமரன் திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றி கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் SK25 திரைப்படத்தில் நடித்தது வருகிறார். இப்படத்தில் இவருடன் இணைந்து நடிகர் ஜெயம் ரவி, நடிகர் அதர்வா முரளி , நடிகை ஸ்ரீலீலா ஆகியோர் நடிக இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் இந்த ப்ரோமோ சூட் ஆரம்பமானது. இது தற்போது நினைவடைந்துள்ள நிலையில் இது குறித்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் "இயக்குனர் சுதாகொங்கரா இயக்கத்தில் உருவாகிவரும் என்னுடைய 25-ஆவது படத்திற்கான ப்ரோமோ ஷூட் நிறைவடைந்துவிட்டது. அதில் என்னுடன் ஜெயம் ரவி, அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கின்றனர். ஜெயம் ரவி அவர்கள் எனக்குச் சீனியர். அவருடைய பல படங்களை என்னுடைய கல்லூரிக் காலங்களில் பார்த்துள்ளேன். அவரை இந்தப் படத்தின் வில்லன் என்று சொல்வதை விட, எதிர்மறைக் கதாபாத்திரம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அவருடன் படத்தில் சண்டை செய்வதற்குக் காத்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து சிவகார்த்திகேயன் தனது SK24வது திரைப்படத்தில் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். மேலும் 23வது படத்தினை இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அமரன் திரைப்படத்தின் பின்னர் இவரின் அடுத்தடுத்த திரைப்படங்களின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
Listen News!