அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயனிற்கு பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது.அந்த வரிசையில் ஆரம்பத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருந்த சுதா கெங்கார இயக்கும் புறநாநூறு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.இவருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் ரவிமோகன் ,அதர்வா ஆகியோர் நடிக்கவுள்ளனர்.
இப் படத்தின் தலைப்பு குறித்து பெரிய குழப்பத்தில் இருக்கும் படக்குழு சமீபத்தில் புறநானுறு எனும் பெயரினை மாற்றி 1965 என வைப்பதாக அறிவித்திருந்தது.இந்நிலையில் தற்போது அந்த தலைப்பையும் மாற்றியுள்ளனர்.இறுதியாக படத்திற்கு "பராசக்தி" என பெயர் வைப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
1960 களில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகியுள்ள படத்தின் பெயரினை இப் படக்குழு வைக்க தீர்மானித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Listen News!