• Dec 26 2024

’சின்ன சின்ன கண்கள்’ பாடலின் இன்னொரு வெர்ஷன்.. விஜய்க்கு பதில் பிரசன்னா.. பூரிப்பில் சினேகா..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன சின்ன கண்கள்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலில் விஜய், சினேகா மற்றும் அவர்களது குழந்தை நடிக்கும் வகையில் படமாக்கப்பட்டு இருந்தது என்பதும் சமீபத்தில் இந்த வெளியான இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

மேலும் இந்த பாடலுக்கு ஒரு கூடுதல் சிறப்பாக ஏஐ டெக்னாலஜி மூலம் இசைஞானி இளையராஜாவின் மறைந்த மகள் பவதாரிணி குரல் பயன்படுத்தப்பட்டது என்பதும் விஜய், பவதாரிணி பாடிய இந்த பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த பாடலின் சில வீடியோ காட்சிகள் மட்டும் வெளியாகி இருந்த நிலையில் அதில் விஜய் மற்றும் சினேகா கெமிஸ்ட்ரி சூப்பராக இருந்தது என்றும் விஜய், சினேகா தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது போன்றும் அது மட்டுமின்றி சினேகா கர்ப்பமாக இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நிறுவனம் ஒன்று இந்த பாடலை Recreate செய்து விஜய்க்கு பதிலாக அந்த இடத்தில் பிரசன்னாவை வைத்து அவர்களது குழந்தை இருவரையும் வைத்து இந்த பாடலை புதிதாக உருவாக்கி உள்ளது. Recreate செய்யப்பட்ட இந்த பாடல் வீடியோவை சினேகாவுக்கு அந்த நிறுவனம் அனுப்பி வைத்த நிலையில் சினேகா அந்த பாடலை பார்த்து மிகவும் பூரிப்படைந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அந்நிறுவனத்திற்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில் ’சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு பிரசன்னா மற்றும் சினேகா கெமிஸ்ட்ரியுடன் இருப்பது போன்றும் அவர்களது இரு குழந்தைகளும் அந்த பாடலில் இடம்பெற்று இருப்பது போலவும் உள்ளது. இந்த Recreate செய்யப்பட்ட பாடலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement