• Dec 25 2024

கர்ப்பமான வயிற்றுடன் நடிகை சினேகா.. வெளியானது மூன்றாவது ரகசியம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகை சினேகா கர்ப்பமாக இருப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருவதை எடுத்து மூன்றாவது ரகசியம் ஒன்று வெளியாகி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தில் நடிகை சினேகா முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நிலையில் சற்றுமுன் புதிய போஸ்டரை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் சினேகா கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. இதனை அடுத்து  சினேகாவின் கணவராக ஒரு விஜய், ஏற்கனவே குழந்தையாக இருக்கும் சிறுவன் பெரியவனாகும் விஜய் மற்றும் வயிற்றில் கர்ப்பமாக இருப்பவரும் விஜய் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து  இந்த படத்தில் மூன்று விஜய் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தை - மகன் என்ற இரண்டு வேடத்தில் தான் விஜய் நடித்திருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது விஜய்யும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மூன்றாவது விஜய்யின் ரகசியம் இந்த புகைப்படத்தில் இருந்து வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் ’கோட்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் இன்று மாலை 6:00 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி ஏஐ குரல் பாடியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement