சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பலரின் கடின உழைப்புக்கு மத்தியில் கங்குவா திரைப்படம் வெளியானது. இந்த படத்தின் பட ப்ரோமோஷனல் கலந்து கொண்ட பட குழுவினர் கங்குவா 2000 கோடிகளை வசூலிக்கும், இந்த படத்தை வாயை பிளந்து பார்ப்பீர்கள் என பலவாறு பில்டப் கொடுத்தார்கள்.
d_i_a
எனினும் இந்த படம் வெளியாகி நெகட்டிவ் கமெண்ட்ஸ்களை தான் அதிக அளவில் பெற்றது. தமிழ் சினிமாவில் முதல் முறையாக 3டி திரையில் எடுக்கப்பட்ட படமாக கங்குவா காணப்பட்டபோதும், ரசிகர்களின் எதிர்மறையான கருத்துக்களால் இந்த படம் தோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், கங்குவா படத்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கு 143 கோடி கடன் உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் தனது சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமிழ் நாட்டில் கங்குவா திரைப்படம் பெரிய ஷேரை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் 12 கோடிகளை தான் வசூலித்து இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Listen News!