• Dec 26 2024

மே மாத ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூரியின் ‘கருடன்’.. அட்டகாசமான வீடியோ ரிலீஸ்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

மே மாதத்தில் ஏற்கனவே ’அரண்மனை 4’ ‘ஸ்டார்’ உள்பட ஒரு சில படங்கள் வெளியாகி உள்ள நிலையில் தற்போது இந்த பட்டியலில் சூரியின் ’கருடன்’ திரைப்படமும் இணைந்துள்ளது என்பதும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த முதல் திரைப்படமான ‘விடுதலை’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து ’விடுதலை 2 ’ ‘கொட்டுக்காளி’ உள்பட சில படங்களில் நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் இன்னொரு படம் ’கருடன்’ என்பது தெரிந்ததே.

சசிகுமார் மற்றும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார் என்பதும் வெற்றிமாறன் கதை வசனத்தில் உருவான இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னால் முடிவடைந்த நிலையில் தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இந்த நிலையில் சற்று முன்னர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு மே 31ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் விளம்பர பணிகளும் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், ரேவதி சர்மா, ஸ்வேதா, ரோஷினி ஹரிப்ரியன், சமுத்திரகனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி, துஷ்யந்த், மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.


Advertisement

Advertisement