• Apr 24 2025

பாக்கியாவைப் புலம்பவைத்து குளிர்காயும் சுதாகர்..!பொண்டாட்டிக்காக சப்போர்ட் பண்ணும் கோபி..!

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, சுதாகர் சொன்னத நினைத்து பாக்கியா அழுதுகொண்டிருக்கிறார். மறுநாள் இனியா டூரில் எடுத்த போட்டோப் பாத்து ஈஸ்வரி சந்தோசப்படுறார். மேலும் அந்த ஆகாஷை கலியாணம் பண்ணியிருந்தா இப்படி எல்லாம் போயிருப்பாளோ என்று சொல்லுறார். அதைக் கேட்ட செழியன் பாட்டி டூர் போறதவிடுங்க அவளால சந்தோசமா இருந்திருக்க முடியுமா என்று கேக்கிறார்.

அதை அடுத்து கோபி முடிஞ்ச கதையப் பற்றி யாரும் இனிக்கதைக்க வேணாம் என்று சொல்லுறார். பின் பாக்கியா சோகமாக இருக்கிறதப் பாத்த ஜெனி ஆன்டி நீங்க ஓகேவா என்று கேக்கிறார். அதைக் கேட்ட ஈஸ்வரி இவளுக்கு இனி என்ன பிரச்சன மூனு பிள்ளையளுக்கும் கலியாணம் முடிஞ்சுது நிம்மதியா இருக்கிறத விட்டுட்டு எதையாவது ஜோசிச்சுக் கொண்டிருக்கிறாள் என்று சொல்லுறார். மேலும் இனியாவோட போட்டோவ பாத்ததில சந்தோசம் இல்லையா என்று கேக்கிறார். அதைக் கேட்ட பாக்கியா சந்தோசமாத் தான் இருக்கு என்று சொல்லுறார்.


இதனை அடுத்து எல்லா நேரமும் பசங்களப் பற்றியே ஜோசிக்கேலாது என்று கோபமாகச் சொல்லுறார். மேலும் என்ர பொண்ணோட சேர்த்து ரெஸ்டாரெண்டையும் கொடுத்திட்டேன்  என்று சொல்லுறார். அத்துடன் இனிமேல் ரெஸ்டாரெண்டுக்கு வரவேணாம் என்று சுதாகர் சொல்லிட்டார் என கோபியைப் பாத்து சொல்லுறார். அதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகுறார்கள்.

அதை அடுத்து இனியாவுக்காக மட்டும் தான் நான் பேசாமல் சும்மா இருந்தேன் என்று சொல்லுறார். அதைக் கேட்ட கோபி நீ சொல்லுற எதையுமே நம்பமுடியாமல் இருக்கு என்கிறார். இதனை அடுத்து செழியன் சுதாகர் வீட்ட போய் ஏன் இப்படி செய்தனீங்க என்று கேக்கிறார். அதுக்கு சுதாகர் பாக்கியா இப்படிக் கதைப்பா என்று நான் எதிர்பாக்கல என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement