• Jun 03 2026

சுந்தர்.சி அவுட்.. சிபியும் அவுட்டா.? ரஜினி படத்தில் புதிய திருப்பம்.!

Aathira / 15 hours ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது `ஜெயிலர் 2' படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக எந்த இயக்குநருடன் இணையப் போகிறார் என்ற கேள்வியே ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதமாக மாறியுள்ளது.

முன்னதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகவுள்ள `தலைவர் 173' திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அதன்பிறகு படக்குழுவில் பல மாற்றங்கள் நடந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், `ஓ மை கடவுளே' மற்றும் `டிராகன்' போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தான் தற்போது `தலைவர் 173' படத்தின் இயக்குநராக இருப்பார் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரங்களில் வேகமாக பரவி வருகின்றன.

இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது அஷ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாள். அவருக்கு வாழ்த்து தெரிவித்து ராஜ்கமல் நிறுவனம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள சிறப்பு வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


சாதாரண பிறந்தநாள் வாழ்த்தாக இல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வகையில் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பதால், இதன் மூலம் அஷ்வத் மாரிமுத்துவே ரஜினியின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்ற மறைமுக சைகையை ராஜ்கமல் நிறுவனம் வழங்கியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் `தலைவர் 173' படத்தின் இயக்குநர் தேர்வைச் சுற்றி ஏற்கனவே பல திருப்பங்கள் நடந்துள்ளன. முதலில் இயக்குநர் சுந்தர் சி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் அவர் திடீரென விலகினார். அதன்பிறகு சிபி சக்கரவர்த்தியின் பெயர் உறுதியானதாக பேசப்பட்டது. ஆனால் தற்போது அஷ்வத் மாரிமுத்துவின் பெயர் முன்னிலைக்கு வந்துள்ளது.

இதனால் ரஜினிகாந்தின் அடுத்த படத்தில் என்ன மாதிரியான கதை இருக்கும்? அஷ்வத் மாரிமுத்து தனது வழக்கமான ஃபேண்டஸி மற்றும் எமோஷனல் கதையம்சங்களை இதில் இணைப்பாரா? அல்லது முற்றிலும் புதுமையான முயற்சியுடன் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

எதுவாக இருந்தாலும், ராஜ்கமல் நிறுவனத்தின் சமீபத்திய பதிவு `தலைவர் 173' குறித்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement

Advertisement