சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடில், ரோகிணி சிந்தாமணியுடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த அவரது அம்மா, "சிந்தாமணியின் சகவாசம் தேவையில்லை. அவர் பார்க்கவே தவறானவராகத் தெரிகிறார்" என்று ரோகிணிக்கு அறிவுரை கூறுகிறார். ஆனால் ரோகிணி, "உங்களுடைய அட்வைஸ் எனக்குத் தேவையில்லை. நான் யாருடன் பழக வேண்டும் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறி அவரை அனுப்பிவிடுகிறார்.
அதன் பின்னர், முத்து 10 லட்சம் ரூபாய் பணத்தை மீனாவின் கையில் கொடுக்கிறார். அப்போது, மீனா தூங்கும்போது சிந்தாமணியின் ஆட்கள் அந்தப் பணத்தை திருடிச் செல்வது போன்ற கனவு காண்கிறார்.
இதனால் பயந்து அலறி எழும் மீனாவை முத்து சமாதானப்படுத்தி, அது வெறும் கனவு தான் என்று கூறுகிறார். இருப்பினும், பண விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று இருவரும் முடிவு செய்கின்றனர்.

அதன்படி, அடுத்த நாள் மீனா வெளியே செல்லும்போது, அவரிடமிருந்து பணத்தை எடுத்துச் செல்ல முயற்சி நடக்கிறது. அதேபோல், முத்துவையும் சிந்தாமணியின் ஆட்கள் கண்காணிக்கின்றனர். ஆனால் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவி முத்து தப்பித்துச் செல்கிறார்.
இதனைத் தொடர்ந்து, பைனான்சியரிடம் பணம் பெறச் செல்லும் முத்துவிடம், அவரது கார் டிரைவர் பணத்தை கொண்டு வருவதாக கூறுகிறார். ஆனால் பின்னர், டிராபிக் போலீசாரிடம் சிக்கியதாக தகவல் தெரிவிக்கிறார். இதனால் முத்து, அவரிடமே நேரில் சென்று பணத்தை வாங்குவதற்காக புறப்படுகிறார்.இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!