• Oct 26 2024

ஜெயிலர் 2 குறித்து நெல்சன் கூறிய தகவல்!மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்..

Mathumitha / 1 hour ago

Advertisement

Listen News!

முதல் முறையாக நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் நல் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்திருந்தது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் ஹிட் படமாக மாறியது.


ஜெயிலர் திரைப்படத்தை அடுத்து ஜெயிலர் 2 படத்தின் அப்டேட்கள் வெளியாகி வருகிறது.இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்குவதற்காக இயக்குநர் நெல்சன் அவர்கள் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ஜெயிலர் 2 தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது இது ஒருபுறம் இருக்க நெல்சன் திலீப்குமார் அண்மையில் பேட்டி ஒன்றில் ரஜினியுடன் இணைவது தொடர்பில் கூறியுள்ளார் .இதில் ரஜினி நடித்துவரும் கூலி படத்தினை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டு சேரவுள்ளதாகவும் அது ஜெயிலர் 2 இல்லை வேறொரு கதைக்களத்துடன் உருவாகும் திரைப்படம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement