பல எதிர்பார்ப்புகளுடன் நீண்ட வருடத்தின் பின்னர் சூர்யா நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி ஒரு சில விமர்சனங்களினால் படம் தோல்வியடைந்தது. இருப்பினும் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப் படத்தின் பின்னர் இவர் ரெட்ரோ ,வாடிவாசல் ,சூர்யா 45 போன்ற படங்களில் நடித்து வருகின்றார்.
இதில் ரெட்ரோ திரைப்படம் வருகின்ற மே மாதம் திரைக்கு வரவுள்ளது. இப் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. மற்றும் rj பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45 ஆவது படம் தயாராகி வருகின்றது. இப் படத்தில் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதுடன் இப் படத்தில் நட்டி நட்ராஜ் ,ஜோகி பாபு ,திரிஷா ,சுவாசிகா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
படம் குறித்த பல அப்டேட்டுகள் வெளியாகியிருந்தாலும் சூர்யா ரசிகர்கள் தலைப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இப் படத்தின் தலைப்பு குறித்து ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது படத்தின் பெயர் "பேட்டைக்காரன் " என குறிப்பிடப்படுள்ளது. மற்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
Listen News!