• Mar 02 2025

சூர்யாவின் 45வது படப்பிடிப்பில் ஏற்பட்ட சிக்கல்...– அத்துமீறிய பொலிஸார்!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு திடீரென நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு எந்த காரணத்தால் நிறுத்தப்பட்டது என்ற கேள்வியினை ரசிகர்கள் அனைவரும் கமெண்ட்ஸ் மூலமாக கேட்டுவருகின்றனர்.

சூர்யா தற்போது பல புதிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்தப் படங்களில் ஒன்றின் படப்பிடிப்பு, சென்னை நகரத்திற்கு அருகிலுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வந்தது. சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியானது.


முதலில், இந்தப் படப்பிடிப்புக்கு தேவையான அனுமதியினை படக்குழு பெறாது இருந்ததனால் அதிகாரிகள் திடீரென இடையீடு செய்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதிகாரிகள் இந்தப் படப்பிடிப்புக்கு அனுமதி தேவை என்று கூறியதன் பின்னரே, படக்குழுவினர் தங்கள் வேலைகளை நிறுத்தியுள்ளனர்.

ஆனால், படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரிகள் தெரிவித்துள்ள பிரச்சனைகள் சரி செய்யப்பட்ட பிறகு, அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது. சூர்யா நடிக்கும் படம் என்பதால், ரசிகர்கள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருவதுடன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது  குறித்தும் அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

Advertisement