• Dec 26 2024

வலி ஏற்படுத்தியவரை பற்றி பேசுகிறீர்கள்... அனுபவித்தவர்கள் வலி உணர்வது இல்லை... ரச்சிதா எமோஷ்னல் பதிவு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தினேஷ்  மற்றும் நடிகை ரச்சிதா ஒன்றாக சேர்ந்து நடித்த முதல் சீரியலிலேயே நண்பர்கள் ஆகி பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் தற்போது இருவரும் பிரிந்து தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர்.


பிக் பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்ட தினேஷ் தனது மனைவியுடன் சேர விரும்புகிறேன். என்னுடைய மனைவிக்கு பிக்பாஸ் டைட்டில் ரொம்பவே பிடிக்கும் அதனால் அவருக்காக நான் இந்த டைட்டிலை வாங்கி பரிசளிப்பேன் என்று கூறியிருந்தார்.


இதனால் ரசிகர்கள் பலரும் தினேஷ் மற்றும்  ரச்சிதா ஜோடி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றுசோசியல் மீடியா பக்கங்களில் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ரச்சிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமோஷனலாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், எல்லாரும் வலி ஏற்படுத்தியவர்களை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


நான் இந்த அளவிற்கு உறுதியான முடிவில் இருக்க வேண்டுமென்றால் எவ்ளோ வலியை சந்தித்து இருப்பேன் என்று யாரும் யோசிக்கவே இல்லை என ரச்சிதா பதிவிட்டு இருந்தார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் ரச்சித்தாவிற்கும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இவர்கள் இருவரும் இணைவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.     

Advertisement

Advertisement