• Apr 18 2026

கடைசி நாள் படப்பிடிப்பு புகைப்படம்.. முடிவுக்கு வந்தது 3 வருட விஜய் டிவி சீரியல்...!

Sivalingam / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் முடிவுக்கு வருவதை அடுத்து கடைசி நாள் படப்பிடிப்பு குறித்த புகைப்படத்தை அந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'தமிழும் சரஸ்வதியும்' என்பதும் இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். 

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய இந்த சீரியல் கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று வந்தது என்பதும் இந்த சீரியல் உள்ள அனைத்து கேரக்டர்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது. குறிப்பாக தமிழரசன் கேரக்டரில் நடித்த தீபக், சரஸ்வதி கேரக்டரில் நடித்த நட்சத்திரா நாகேஷ் ஆகிய இருவரும் பார்வையாளர்கள் மனதில் பதிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



இந்த நிலையில் இந்த சீரியல் விரைவில் முடிவடைய இருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் தற்போது உண்மையாகவே முடிவடைய உள்ளது. இந்த சீரியலில் சரஸ்வதி கேரக்டரில் நடித்த நட்சத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவில் கடைசி நாள் 'தமிழும் சரஸ்வதியும்' படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

மூன்று வருடங்களாக ஒரு குடும்பமாக இருந்த நாங்கள் இன்றுடன் பிரிய இருக்கிறோம் என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளதை அடுத்து இந்த சீரியல் முடிவுக்கு வருவது எங்களுக்கும் வருத்தமாக இருக்கிறது என்று பார்வையாளர்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement