• Dec 27 2024

அமீர்-பாவனி ரெட்டிக்கு இடையில எல்லாம் முடிஞ்சிருச்சா? டிரஸ்ஸை பார்த்தா அப்படித்தான் தெரியுது..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் இணைந்திருக்கும் புகைப்படம் அவர்களது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வரும் நிலையில் இருவருக்கும் இடையே எல்லாம் முடிந்து விட்டதா? என்ற கமெண்ட்கள் பதிவாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளராக அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருந்தபோது தான் இருவருக்கு இடையே கெமிஸ்ட்ரி உண்டானது என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு உள்ளேயே கிட்டத்தட்ட அவர்கள் காதலர் ஆகிவிட்டார்கள் என்பதையும் பார்த்தோம். 

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதலராக இருப்பவர்கள் வெளியே வந்தவுடன் எதிரிகளாக மாறிவிடுவார்கள். கவின் - லாஸ்லியா உட்பட பலரை அப்படித்தான் பார்த்தோம். ஆனால் அமீர், பாவனி ரெட்டி கதை அந்த மாதிரி இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் இருவரும் ஒன்றாக சுற்றிக்கொண்டிருந்த செய்திகள் வெளியாகின. மேலும் இருவரும் நெருக்கமாக மனதளவில் இருப்பதாகவும், தங்கள் தொழிலில் ஒரு நல்ல நிலைக்கு வந்தவுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேட்டி அளித்திருந்தனர். 

அதுமட்டுமின்றி இருவரும் தங்களது சமூக வலைதளத்தில் பல புகைப்படங்களை பதிவு செய்து வந்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வந்தது. இந்த நிலையில் சற்றுமுன் அமீர் மற்றும் பாவனி ரெட்டி  ஒரு இரவு பாட்டியல் கலந்து கொண்ட புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படத்தில் பாவனி ரெட்டி செம கிளாமரான உடை அணிந்து வந்ததை பார்த்து உங்கள் இருவருக்கும் எல்லாம் முடிந்து விட்டதா? டிரஸ்ஸ பார்த்தா அப்படித்தான் தெரியுது’ என்று கமெண்ட்கள் பதிவாகிறது

அதற்கு சிலர் அவர்களுக்கு பிடித்த டிரஸ்ஸை அவங்க போட்டுக்குறாங்க, உங்களுக்கு என்ன பிரச்சனை? அவங்க ரெண்டு பேரும் பல பிரச்சனைகளை சந்தித்து இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறார்கள், அது உங்களுக்கு பிடிக்கவில்லையா? என்று பதில் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது. மொத்தத்தில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் சந்தோஷமாக தங்கள் வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள் என்பது அவர்களது அவர்களது ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்திதான்.



Advertisement

Advertisement