• Dec 26 2024

முதலமைச்சரை திடீரென சந்திக்கும் தளபதி விஜய்.. என்ன காரணம்?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் தற்போது திருவனந்தபுரத்தில்கோட்படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் அவர் திடீரென முதலமைச்சரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் சந்திக்க இருப்பது தமிழக முதலமைச்சரை அல்ல என்பதும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும்கோட்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்த பின்னர் அவர் ரசிகர்களை சந்தித்து வரும் நிலையில் முதலமைச்சரை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அவர் அப்பாயின்மென்ட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  இதனை அடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் விஜய் சந்திப்பு இன்னும் ஓரிரு நாளில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தளபதி விஜய் தமிழக முதல்வர் மு ஸ்டாலின் அவர்களை பலமுறை சந்தித்திருக்கிறார் என்பதும் புதுவை முதல் ரங்கசாமி, தெலுங்கானா முதல்வராக இருந்தார் சந்திரசேகர ராவ் ஆகியோரை சந்தித்த நிலையில் தற்போது கேரள முதல்வரையும் சந்திக்க உள்ளார்.

தளபதி விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் மாறிவிட்ட நிலையில் ஒரு நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் கேரள முதல்வரை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement