• Dec 26 2024

’இளையராஜா’ பயோபிக் திரைப்படம்.. தனுஷுடன் இணைகிறாரா சிம்பு?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான ’இளையராஜா’ என்ற படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது என்பதும் நேற்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இளையராஜா கேரக்டரில் தனுஷ் நடிக்கும் இந்த படத்தில் மற்ற கேரக்டர்களில் நடிக்க நட்சத்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் இளையராஜாவுடன் நெருங்கி பழகிய நண்பர்கள் மற்றும் சக இசையமைப்பாளர்கள் கேரக்டர்கள் வரும் என்று கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், கங்கை அமரன் மற்றும் ஏ ஆர் ரகுமான் கேரக்டர்கள் இந்த படத்தில் இடம் பெற்று இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் தான் தற்போது படகுழுவினர்களிடம் இருந்து கசிந்த தகவல் படி ஏஆர் ரகுமான் கேரக்டரில் நடிக்க சிம்புவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் மட்டும் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டால் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அஜித் - விஜய்க்கு பிறகு தனுஷ் - சிம்பு போட்டியாளர்களாக கருதப்படும் நிலையில் இருவரும் இணைந்து இதுவரை எந்த படத்தில் நடிக்காத நிலையில் ’இளையராஜா’ படத்தில் நடித்தால் அட்டகாசமாக இருக்கும் என்று ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏஆர் ரகுமான் கேரக்டருக்கு சிம்பு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் அவரை விட்டால் இந்த கேரக்டருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க ஆளே இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே இளையராஜா பயோபிக் திரைப்படத்தில் தனுஷ் உடன் சிம்பு இணைவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement