• Dec 25 2024

கடைசில வானத்துலையே ப்ரமோஷனா?... வேற லெவல் மாஸ் காட்டும் தளபதி ரசிகர்கள்....

subiththira / 4 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜயின் அடுத்த படமான "கோட்" வருகிற செப்டம்பர் 5ஆம் திகதி உலக அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் நாட்டின் மொத்த தியேட்டர்களிலும் "கோட்" திரைப்படம் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  ஒரு படி மேலே போய் தரமான ப்ரமோஷன் ஒன்றை செய்துள்ளார். 


யுவனின் இசையில் வெளியான "கோட்" படத்தின் பாடல் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்களுக்கு உள்ளான நிலையிலும் யூடியூப் வலைதள பக்கத்தில் 13 மில்லியனுக்கும் அதிகமான பார்வையார்களை கடந்துள்ளது. படம் வெளியாகயுள்ள நிலையில் தற்போது ப்ரமோஷன் வேலைகள் அதிரடியாக நடந்துவருகிறது. 


தளபதியின் "கோட்" படத்தின் ட்ரைலரானது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15 இல் வெளியாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளது. அதே போல செப்டெம்பர் மாதம் 5ம் திகதி படம் வெளியாகவுள்ளதால் திரைபடக்குழு, ரசிகர்கள் உட்பட அணைவரும் ப்ரமோஷன் வேலையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் விமானத்தில் கோட் திரைப்பட போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.      

Advertisement

Advertisement