• Dec 26 2024

மறைந்த நடிகர் விஜகாந்த் தொடர்பில் தளபதி விஜய் சொன்ன சுவாரஸ்ய தகவல்! வைரலான பதிவு

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்ட  நடிகர் விஜகாந்த் கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களமிறங்கி எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில விஷயங்களால் அரசியலில் சறுக்கலை சந்தித்தார். அதேபோல் அந்த சமயத்தில் அவருக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. 

இதனால் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சையும் செய்துகொண்டார்.  அமெரிக்காவிலிருந்து திரும்பிய பிறகு முழுநேர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருந்தார். சூழல் இப்படி இருக்க அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.


அதாவது நுரையீரல் அழற்சி ஏற்பட்டதன் காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி, சாதாரண மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரையும் மீளா சோகத்தில் ஆழ்த்தியது.


இந்த நிலையில், நடிகர் விஜய் தற்போது மறைந்து போன நடிகர் விஜயகாந்த் குறித்து முன்பு பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.

அதன்படி அதில் அவர் கூறுகையில், கிளாஸ் ஆடியன்ஸ், மாஸ் ஆடியன்ஸ்னு 2 பேரு இருக்காங்க, அது மாஸ் ஆடியன்ஸ் இருக்காங்கல்ல அவங்க நடிகன நடிகனா ஒத்துக்கணும், அது ரொம்ப முக்கியம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி ஒரு பெரிய ஹீரோனா அது அண்ணன் விஜயகாந்த் தான். செந்தூரப்பாண்டி படத்தில் அவருக்கு தம்பியாக நான் நடித்திருந்தேன். அவர் மூலமாக நான் ரசிகர்களுக்கு அறிமுகமாகுறேன் என பேசியுள்ளார்.

Advertisement

Advertisement