• Dec 26 2024

தனது ட்ராமாவை ஸ்மூத்தாக ஆரம்பித்த தங்கமயிலு.. புகழ்ந்து தள்ளிய பாண்டியன்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர் 2. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், காலையில் கோலம் போடுவதற்காக வீட்டு வாசலுக்கு செல்கிறார் கோமதி. அங்கு வாசலில் கோலம் போட்டு இருப்பதை பார்த்து யார் போட்டு இருப்பா என யோசிக்கிறார்.

அதன் பிறகு கிச்சனுக்கு சென்று பார்க்க இட்டலிக்கு மா அரைத்து வைக்கப்பட்டு, பொங்கலும் செய்து வைக்கப்பட்டுள்ளது. பிறகு மீனாவும் ராஜியும் வந்து நான் கோலம் போட்டு வாரேன் அத்தை என மீனா செல்ல, அது எல்லாம் ஏற்கனவே போட்டு இருக்கு என்று கோமதி சொல்லுகிறார். அப்போ டீ போட்டு வாரேன் என்று சொல்ல அதுவும் போட்டு இருக்கு என்று கோமதி சொல்லுகிறார்.


யாரு இந்த வேலைகளை எல்லாம் செய்திருப்பா? என்று திரும்ப, தங்க மயிலு வீட்டிற்கு சாம்பிராணி போட்டப்படியே நான் காலைல நாலு மணிக்கு எழும்பி எல்லா வேலையும் முடிச்சிட்டேன் என்று சொல்லுகிறார். இதைக் கேட்டு மீனாவும் ராஜியும் முகத்தை சுழித்து கொள்கின்றார்கள்.

அந்த நேரத்தில் அங்கு பாண்டியனும் வர, மாமா உங்களுக்கு காபி வேணுமா? டீ வேணுமா? என்று தங்கமயில் கேட்கிறார். அதற்கு பாண்டியன் டீ கொண்டு வா என்று சொல்ல, தங்கமயில் டீ கொண்டு வந்து கொடுக்கிறார். இதை குடித்துவிட்டு நான் என்  வாழ்க்கையில இதப்போல டீ குடித்ததே இல்லை என்று புகழ்கிறார் பாண்டியன்.

இதைத் தொடர்ந்து மீனாவின் ரூமுக்கு சென்று அங்கு செந்தில் தம்பி என்று கூப்பிட, செந்தில் பதறிக் கொண்டே பெட்சீட்டால்  மூடிக்கொள்ளுகிறார். அந்த இடத்திற்கு மீனாவும் வந்து விடுகிறார்.

எனவே தங்கமயில் தனது நாடகத்தை ஆரம்பித்து அனைவரையும் கவுக்க பிளான் போட்டு விட்டார். எனினும் இவரின் தில்லாலங்கடி வேலைகள் எல்லாம் பாண்டியன் குடும்பத்துக்கு தெரிய வருமா என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement