• Jun 14 2026

நடிகை த்ரிஷாவுக்கு கிடுகிடுவென குறைந்த 16 வயசு.. இதுதான் சீக்ரெட்?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வயது முதிர்ந்த நடிகையாக காணப்பட்டாலும் தற்போது வரை இளமையாக பல படங்களில் இன்னும் ஹீரோயினாக நடித்து வரும் நடிகை தான் த்ரிஷா. அவருக்கான மார்க்கெட் இன்று மட்டும் டாப் நிலையிலேயே காணப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து பிரபலமானவர் தான் நடிகை த்ரிஷா. இவருக்கு தமிழ்த் திரை உலகில் நல்ல வரவேற்பு காணப்படுகின்றது.

தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமல்லாமல் பிரபல இயக்குனர்களின் படத்திலும் இவர் நடித்துள்ளார்.


நடிகை திரிஷா நடிப்பில் இறுதியாக வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஜய் - த்ரிஷாவின் காம்போ, 20 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆன கில்லி படம் போலவே ஒர்க் அவுட் ஆகி இருந்தது.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். அதில் முகத்தை வைத்து வயதை கணிக்கும்  ஆப்பின் மூலம் தனது வயதை கணித்துள்ளார் த்ரிஷா. அதில் அவருக்கு 24 வயது என கணிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு ரசிகர்களின் அன்பை மேலும் பெற்று வருகிறார்.


Advertisement

Advertisement