• Sep 17 2026

சன்டிவியில் ஒளிபரப்பான பிரபல சீரியலின் 2ம் பாகம் விரைவில் ஆரம்பம்? வெளியான தகவல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் ஒளிபரப்பாக தொடங்கி டிஆர்பி ரேட்டிங்கிலும் சக்கைப் போடு போட்டு வந்தது. பட்டித் தொட்டி எங்கும் இந்த சீரியல் பேமஸ் ஆக காணப்பட்டது.

இதில் ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அவர்கள் எதிர் நோக்கும் சவால்கள், அதிலிருந்து மீண்ட விதம் என்று பல கோணத்தில் இந்த சீரியல் நகர்ந்து சென்றது.

அதிலும் எதிர்நீச்சல் சீரியலின் ஆரம்பத்தில் நடித்த மாரிமுத்து குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டி இருந்தார். இவரது கேரக்டருக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. பலர் இவரது பேச்சுக்காகவும் பாடி லாங்குவேஜ்காகவும் இந்த சீரியலை விரும்பி பார்த்தார்கள். ஆனாலும் இவர் மாரடைப்பு ஏற்பட்டு திடீரென உயிரிழந்தார். இதன் காரணத்தினால் சீரியலும் சரிவை சந்திக்க ஆரம்பித்தது.


இதைத்தொடர்ந்து குணசேகரன் கேரக்டருக்கு வேலராமமூர்த்தி ஒப்பந்தமானார். ஆனாலும் இவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள சில காலமானது. மாரிமுத்துவுக்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு கிடைக்கவில்லை என்றே கூறலாம். இதன் காரணத்தினாலேயே இந்த சீரியல் மிகவும் டல்லடித்தது.

அதன் பின்பு தர்ஷினி கடத்தல், தர்ஷினியின் திருமணம், அண்ணன் தம்பிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரிவு என கதை சுவாரசியமாக சென்றது. இறுதியில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியான ராமமூர்த்தி மனம் வருந்துகிறார். இத்துடனே இந்த சீரியலை நிறைவிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.

இந்த நிலையில், தற்போது எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் ஆரம்பமாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சீரியலில் பழைய நடிகர்கள் தான் நடிக்க போகின்றார்களா? அல்லது புதிதாக நடிகர்களை களம் இறக்கப் போகின்றார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement