• Oct 26 2024

ஸ்ருதியின் காலைபிடித்து விட்ட ரோகினி.. கட்டு கட்டாக பணத்தை கொடுத்து மாமியாரை கிடுக்குபிடி பிடித்த மருமகள்! முத்து சரியான பதிலடி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. அதன் இன்றைய எபிசோடில் என்ன நடக்குது என பார்ப்போம்..

அதில், வீட்டில் இருந்த ஸ்ருதிக்கு சிக்னல் கிடைக்காமல் மேசை மீதெல்லாம் ஏறி சிக்கனல் இருக்கா என செக் பண்ண, அந்த இடத்திற்கு வந்த விஜயா பதறிப்போய் இப்படி எல்லாம் பண்ணக்கூடா கீழே இறங்குமா என சொல்லுகிறார்.

அதன்பின், ஆண்ட்டி யூஸ் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தன்.. ஆனா சிக்னல் கிடைக்கல என்பது போல சொல்ல, எதுக்கு யூஸ் ஆர்டர் பண்ணனும் வீட்ல தான் ஒரு கடையே இருக்கே என்று சொல்லி, மீனாவிடம் ஆப்பிள் ஜூஸ் போடுமாறு சொல்லுகிறார்.


அதன்படி, மீனாவும் ஜூஸ் போட்டு கொடுக்க, விஜயா அதை வாங்கி ரோகினியிடம் கொடுத்து, அதனை ஸ்ருதிக்கு கொடுக்குமாறு சொல்லுகிறார். இதன்போது, என்ன நம்ம கிட்டையும் மீனா போல வேல வாங்குறாங்க என்பது போல யோசித்து கொண்டு, ஸ்ருதி ரூம்க்கு சென்று யூஸ் கொடுக்கிறார்.

இதைப் பார்த்த முத்து என்ன பதவி பறிபோய்டுச்சு போல, அதுக்கு எல்லாம் காரணம் 50 சவரன் நகை தான் அடுத்த வாரமே நீ 51 சவரன் நகையை கொண்டு வந்த அந்த பதவி உனக்கு வந்துடும் என கிண்டல் செய்கிறார்.


அதன் பிறகு ஸ்ருதி நகம் வெட்ட வேணும் என விஜயாவிடம் நகவெட்டி கேட்க, அதற்கும் விஜயா, ரோகிணியை அழைக்கிறார். ரோகினிக்கு கோவம் வந்தாலும், ஸ்ருதியின் கால்களை சுத்தம் செய்து விடுகிறார்.

இதை தொடர்ந்து, இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமென யோசித்த ரோகினி, தன்னிடம் இருந்த 5000 ரூபாவை தனது நண்பியிடம் கொடுத்து அதனை 50 ரூபா நோட்டுக்களாக மாற்றி தர சொல்லுகிறார்.


அதன்பின், அந்த நோட்டுக்களை கொண்டு வந்து விஜயாவிடம் கொடுக்க, அப்படியே இவ்வளவு பணமா என பூரித்து போகிறார் விஜயா. ஆமா.. அத்தை உங்களுக்கு நிறைய செலவு இருக்கும் தானே.. அதான் 50 ரூவாயா மாற்றி கொண்டு வந்து தந்தன். இனி மாசம் மாசம் தருவன் என்பது போல சொல்லுகிறார்.


கட்டுக் காட்டாக பணத்தைப் பார்த்த சந்தோஷத்தில் விஜயா இருக்க, அங்கு வந்த மனோஜ், செலவுக்கு பணம் தருமாறு கேட்கிறார். எனினும், தன்னிடம் பணம் இல்லையென சொல்ல, அதான் ரோகிணி கொடுத்த பணம் இருக்கே என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement