• Dec 26 2024

என் பையன் காதலுக்கு ஓகே சொல்ல காரணம் இதான்..! சரியான பதிலடி கொடுத்த தம்பி ராமையா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன், நடிகரான உமாபதியும், நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து வந்த நிலையில், இருவீட்டார்  சம்மதத்துடனும் அண்மையில் எளிமையான முறையில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில், தற்போது தம்பி ராமையா கூறிய கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.அதன்படி அவர் கூறுகையில்,


பேட்டியொன்றில், உங்களுடைய  மகன் காதலை பற்றி வந்து சொன்னதும் நீங்கள் என்ன சொன்னீங்க அப்பிடீனு கேட்டதுக்கு, ஐஸ்வர்யா எனக்கு  இன்னொரு மகள், என்னைப்பொறுத்தவரையில் குழந்தைகள் என்பவர்கள் என்னால் பிறந்தவர்கள். ஆனால் எனக்காக பிறக்கவில்லை அவர்கள் வாழ பிறந்தார்கள் அவர்களுக்கு எது மகிழ்ச்சியோ அதை முறைப்படி செய்து கொடுப்பது ஒரு தாய் தந்தையுடைய கடமை.


அதோடு தம்பி ராமையாவிடம் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறீர்களானு கேட்டதற்கு,  ஒரு குழந்தை பிறந்தால் பெயர் வைப்பது அவர்கள் பெற்றோர் தான் அவர்களிடம் தான் அதை கேட்க வேண்டும் அதை விட்டுட்டு வேற யார்கிட்டையும் கேட்க முடியாது தானே.. அதே போல படத்தில் நான் இருக்கேனா இல்லையானு ராஜா அவர்கள் தானே சொல்ல வேண்டும் என்று தன்னோட ஸ்ரைலில்  சொல்லியுள்ளார் தம்பி ராமையா.

Advertisement

Advertisement