• Dec 25 2024

சீதா ராம் சீரியலில் என்ட்ரியான பிரபல ஹீரோ.. சீதா வாழ்க்கையை புரட்டி போட்ட அதிரடி திருப்பம்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் தான் சீதா ராம். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

ஏற்கனவே சீதாராம் சீரியலில் மகாலட்சுமி உயிரிழந்ததாக நடித்த பின்பு நான்சி என்பவர் வந்தார். அதன் பின்பு நான் தான் மகாலட்சுமி என மீண்டும் அதிர்ச்சி கொடுத்திருந்தார். ஆரம்ப முதல் இப்போது வரை சீதாவையும் ராமையும் பிரிப்பது தான் மகாவின் நோக்கமாக இந்த சீரியலில் காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் சீதாராம் சீரியலில் புதிய நடிகர் ஒருவர் அன்பு என்ற கேரக்டரில் என்ட்ரி ஆகிறார். அதாவது அஞ்சலிக்கு கணவராக இந்த சீரியலில் என்ட்ரி ஆகிறார்.

அதன்படி அஞ்சலி பிளான் பண்ணி சீதாவை கோயிலுக்கு கூட்டிச் செல்கிறார். அங்கு அஞ்சலி சீதாவுக்கு தெரியாமல் அன்புவை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின் இதனைப் பார்த்து சீதா அதிர்ச்சி அடைகிறார்.


இதை அடுத்து வீட்டுக்கு அஞ்சலியையும் அவரது கணவரையும் திருமணம் செய்த கோலத்தில் கூட்டி போக, அங்கு இதை பார்த்து அதிர்ச்சியடைந்து வீட்டார் நிற்க, கோவப்பட்ட மகாலட்சுமி, சேதுவுக்கு இவள் மகளும் இல்ல இந்த வீட்டில இனி இவளுக்கு இடமும் இல்லை என அஞ்சலிக்கு சொல்லுகிறார்.

அந்த நேரத்தில் எல்லா பிளானையும் போட்டுக் கொடுத்தது இந்த சீதா தானே என அர்ச்சனா சொல்லுகிறார். இவ்வாறு சீதாராம் சீரியல் தற்போது புதிய திருப்பத்தில் ஆரம்பித்துள்ளதோடு அஞ்சலிக்காக தனது குடும்பத்தையே எதிர்க்கும் நிலைக்கு சீதா  தள்ளப்பட்டுள்ளார். இனி இந்த சீரியல் எவ்வாறு நகரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Advertisement

Advertisement