• Dec 26 2024

இப்பவே சந்தேகம் கிளம்பிடுச்சு...?? கிடுக்கிப்பிடி பிடித்த பாண்டியன்! பலியாடான சரவணன்!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர் 2. இதன் முதலாவது பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசப்பிணைப்பை வைத்து ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இதன் இரண்டாவது பாகம் தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்டு நகர்ந்து செல்கிறது.

பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் தற்போது சரவணனுக்கு கல்யாணம் செய்யும் நிகழ்வுகள் தான் விறுவிறுப்பாக நடக்கிறது. தற்போது வெளியான ப்ரோமோவின் படி, தங்கமயில் வீட்டுக்கு பாண்டியன் குடும்பத்தார் நிச்சயதார்த்தம் பண்ணுவதற்காக கிளம்பி செல்கிறார்கள்.

அங்கு தங்கமயில் அம்மா பாண்டியன் குடும்பத்தை உள்ளே வரவேற்று, தங்களது குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துகிறார். அந்த நேரத்தில் பாண்டியன், உங்களுக்கு  நிறைய சொந்தங்கள் இருக்குது என்று சொன்னீங்க, ஆனா கொஞ்ச பேர் தானே இருக்காங்க என்று கேட்க, கல்யாணத்துக்கு எல்லாரையும் கூப்பிடலாம் என சமாளிக்கிறார் தங்கமயிலின் அப்பா.


இதைத்தொடர்ந்து தங்கமயில் அணிந்திருந்த நகைகளை பார்த்து எல்லாம் பளபளப்பாக இருக்குதே எங்க வாங்குறீங்க எனக் கேட்க, தங்கமயில் என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்க, அங்கு வந்த அவரின் அம்மா வழமையா வாங்குற கடையில தான் வாங்கினோம் என சமாளித்து அவரை அழைத்துச் சொல்கிறார்.

இதையடுத்து சரவணனுக்கும் தங்க மயிலுக்கும் வருகின்ற 30ஆம் தேதி பெரியவர்களின் சம்மதத்துடன் கல்யாணம் நிச்சயிக்கப்படுகிறது என பாண்டியன் சபையில் தெரிவிக்கிறார். அதன் பின் சரவணன் தங்கமயிலுக்கு மோதிரத்தை அணிவித்து எல்லாரும் ஆடல் பாடல் என கலகலப்பாக இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement