பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தொடர்பான சர்ச்சையான வழக்கு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. சித்ரதுர்காவை சேர்ந்த அவரது ரசிகரான ரேணுகாசாமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ஷன் குற்றச்சாட்டில் சிக்கி, தற்போது சட்டநடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகிறார். இந்த சம்பவம் கர்நாடக முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், இந்த கொலை வழக்கை மையமாக கொண்டு கன்னடத்தில் ‘பாஸ்’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியது.
டீசரில் காணப்பட்ட காட்சிகள், ரேணுகாசாமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் மிகுந்த ஒற்றுமை கொண்டதாக பலர் கருத்து தெரிவித்தனர். குறிப்பாக, கதாநாயகனின் உடல் மொழி மற்றும் நடிப்பு பாணி, தர்ஷனை நினைவுபடுத்தும் வகையில் இருந்தது என்பதும் விவாதத்துக்குரியதாக அமைந்தது.
இந்தப் படம் வரும் 14ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்புக் குழு முன்பே அறிவித்திருந்தது. ஆனால், தர்ஷனின் மனைவி விஜயலட்சுமி தர்ஷன், இப்படம் தனது கணவரின் வழக்கை தவறாக வெளிப்படுத்துகிறது என்றும், அவரது மரியாதைக்கும் குடும்பத்திற்கும் சேதம் விளைவிக்கும் என்றும் கூறி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த கர்நாடக High Court, வழக்கின் உணர்வுபூர்வ தன்மையை கருத்தில் கொண்டு ‘பாஸ்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
Listen News!