தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழும் திரிஷா கிருஷ்ணன், கடந்த 24 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் தொடர்ந்து வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், இன்னும் ரசிகர்களின் விருப்பமான நடிகையாக திகழ்கிறார்.

சமீப காலமாக, நடிகை திரிஷா சினிமாவிலிருந்து விலகப்போகிறார் என்ற வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தன. இதனால் ரசிகர்கள் மத்தியில் குழப்பமும் கவலையும் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த வதந்திகளுக்கு நேரடியாக பதிலளிக்கும் விதமாக திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு சுவாரஸ்யமான பதிவை பகிர்ந்துள்ளார்.
அதில், “நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியை திருமணம் செய்துகொண்டேன், நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடி நான்கு குழந்தைகளையும் வளர்த்து கொண்டிருக்கிறேன். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா இதில், இல்லை கற்பனை அளவு முடிந்துவிட்டதா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவின் மூலம், தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளை அவர் சாடியதுடன், அவை அனைத்தும் அடிப்படையற்றவை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். திரிஷா தொடர்ந்து சினிமாவில் செயலில் இருப்பார் என்பதும், மேலும் பல புதிய படங்களில் அவரை காணலாம் என்பதும் இந்த பதிவால் உறுதியாகியுள்ளது.
Listen News!