• Apr 12 2025

'பெருசு'படத்தைப் பாராட்டித் தள்ளிய பிரபல நடிகர்...!சந்தோசத்தில் படக்குழு!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் திரைப்பட உலகம் எப்பொழுதும் பிரம்மாண்டமான திரைக்கதைகளை வரவேற்கும். அந்த வகையில், சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பெருசு' படத்தின் குழுவினருக்கு நடிகர் சிம்பு வாழ்த்துகளைக் கூறியுள்ள தகவல் தற்பொழுது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

 சிம்பு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதுடன் எப்பொழுதும் தனது நேர்மையான கருத்துகளையே வெளியிடும் நபராகக் காணப்படுகின்றார். எக்ஸ் தளத்தில் அவர் பகிர்ந்துள்ள வாழ்த்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


அதில் சிம்பு "பெருசு" படக்குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றதுடன் இப்படம் வெற்றியடைந்து, தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையவேண்டும்!" எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவு வெளியான சில நிமிடங்களில் அதற்கு அதிகளவான ஆதரவுகள் கிடைத்துள்ளன. ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா துறையில் உள்ள பலரும் இந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் ஒரு புது பரிணாமமாக உருவாகியுள்ள 'பெருசு' திரைப்படம், ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சிம்புவின் ஆதரவுக்கு அதிகளவான முக்கியத்துவம் உள்ளது. மேலும் , சிம்புவின் வாழ்த்துகளைப் பெற்ற 'பெருசு' படக்குழுவும் மிகுந்த மகிழ்ச்சியோடு அவரது வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement