• Jan 27 2025

இசையமைப்பாளர் டி.இமான் செய்த காரியம்..! வியந்து பார்க்கும் திரையுலகம்..

Mathumitha / 1 day ago

Advertisement

Listen News!

பிரபல இசையமைப்பாளர் டி.இமான் தனது பிறந்தநாளினை முன்னிட்டு தனது உடலினை தானம் செய்துள்ளார்.இவரின் இந்த செயலினை பாராட்டி பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


நேற்றைய தினம் இவரது பிறந்தநாளினை மிகவும் அருமையான செயலின் மூலம் கொண்டாடியுள்ளார்.உடல் தானம் செய்யும்பொழுது ஒரு சில வார்த்தைகளை கூறியுள்ளார்.அதாவது "என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு full body தானம் செய்துள்ளேன்.அதற்கான ஆதாரமாக கார்டினையும் வாங்கியுள்ளேன்.என்னோட உடம்பு முழுவதும் யாருக்கு அது பயன்படுதோ எதோ ஓர் உயிருக்கு அது போய் சேர்ந்திடுதுன்னா நம்முடைய காலத்துக்கு பிறகும் இந்த உலகத்தில் யாரோ ஒருத்தருடைய வாழ்க்கைக்கு அது பயனுடையதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு இன்னும் உங்களுடைய காலத்திற்கு பிறகும் நீங்கள் ஜீவிக்கலாம் "என கூறியுள்ளார்.


தற்போது வைரலாகி வரும் இவரது இந்த வீடியோ அனைவரையும் வியக்க வைத்துள்ளதுடன் இது மக்களுக்கு ஒரு inspiration ஆக மாறியுள்ளது.

Advertisement

Advertisement